thirukural

1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

இந்த குறளில் தான் எனக்கு தமிழ் முதன்முதலில் அறிமுகமானது.
இன்னும் அதன் சுவையும் பொருளும் மாறாது இனிக்கும் குறளிது.

2.இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்

என்ன அருமையான குறள். இன்னும் இவர்களை விட்டுவைக்கணுமான்னு நினைக்கும்போதெல்லாம்


நினைவுக்கு வந்து என்னை ஆசுவாசப் படுத்தும் குறள் இது.

3.என்னன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு

நம்பிக்கை துரோகம், நம்ப வைத்து ஏமாற்றுதல், வேலை முடிந்ததும் கழட்டிவிடப்படுதல் இவற்றை எல்லாம்
தாண்டி வந்தபின் இந்த குறளின் அருமையும் ஆழமும் எனக்கு புரிந்தது.

4.உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றவை தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

நம் எண்ணம் போலவே வாழ்வு எனும் அருமையான தத்துவத்தை எனக்கு சொல்லிக்கொடுத்த குறளிது.

5.வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனைய உயர்வு.

தாமரை தண்டு நீர்மட்டம் பொருத்து உயர்ந்தும் தாழ்ந்தும் தன்னை சரிசெய்துகொள்வது போல்.. மனித வாழ்வில் எல்லா உயர்வு தாழ்வுகளிலும்
தன்னை சரிசெய்து வாழ்ந்து பழகி கொள்ள சொல்லும் குறள். எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் குறளிது.

6.எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு

என் தந்தை, ஓஷோ, வள்ளுவர் இந்த மூவரும் இந்த குறளில் ஒத்துபோகிறார்கள். மூவருமே.. துணிந்து செய்..அதுவே சக்தி தரும் என்று எனக்கு
சொல்லி தந்த குறளிது.

7.யாகவராயின் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

சொல்வன்மை குறித்தும் அதில் நாம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்லும் குறளிது. எனக்கு தேவையான குறளும் கூட..!!

8.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று

என்ன அருமையான குறள்!! நல்லதை எண்ணி வாழ்வை நல்வழியில் கொண்டு போவதை விடுத்து, தீயதை ஏன் சுமக்கிறாய்..தூக்கி எறி, அழித்துவிடு
என்று சொல்லும் குறள்.

9.நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது

உறுதியான உள்ளமும், ஆர்பாட்டமில்லாத அறிவும் கொண்டவன் மலைகளுக்கும் மேலானவன். இது என்னுடைய இன்ஸ்பிரேஷன் குறள்..!!

10. அன்பிலார் எலாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

அன்பு, Love, என்ன அருமையான குறள். ஒரு ஒட்டுமொத்த மனிதமே அன்புடையதாய் நினைத்து பாருங்கள். கடவுள், சாத்தான் இருவரும் சேர்ந்தே தற்கொலை செய்துகொள்வார்கள்.
அப்படிபட்ட மனிதத்திற்காக காத்திருக்கிறேன். அதோடு என்னால் முடிந்தமட்டும் எல்லாரிடமும் அன்பாய் இருக்கிறேன். :)

Comments

Our Best Blog List