Skip to main content

Posts

Showing posts from February, 2015

தனியார் பள்ளி ஆசிரியர்

ஆசிரியர்கள் என்றால் அடிமைகளா?
நகரின் மையத்தில் பிரமாண்டமாக எழுப்பப்பட்ட பெரிய தனியார் பள்ளியொன்றில் பயிலும் உங்கள் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்கள், உங்களுக்கோ, உங்களது பிள்ளைகளுக்கோ அல்லது இந்த சமுதாயத்துக்கோ மட்டுமே ஆசிரியர்களாக பார்க்கப்படுகிறார்கள். வெளியில் இருந்து பார்த்தால் அப்படித்தான் தெரியும்..உண்மையில் அந்தப் பள்ளி நிறுவனருக்கோ அல்லது அப்பள்ளியின் தாளாளருக்கோ அவர்கள் அடிமைகள் அல்லது, சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள்.
ஒரு சராசரி தொழிலாளிக்கு, ஒரு முதலாளியிடம் கிடைக்கும் நியாயமான மரியாதைகூட பெரும்பாலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைப்பதில்லை. சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட பெரும்பாலான பள்ளிகள் இன்று பெரும் புகழோடும், வானுயர உயர்ந்து நிற்கும் கட்டடங்களோடும், எல்.கே.ஜி-க்கே என்ட்ரன்ஸ் எக்ஸாம் வைத்து சேர்க்கை நடத்தும் அசுர வளர்ச்சிகளுக்கும் பின்னால் இருப்பது மடிப்பு கலையாத முழுக்கை சட்டையும், சட்டைக்கு தோதான டையும் அணிந்தபடி பாடம் நடத்தும் ஆசிரியர்களும், வேலைக்குச் சென்று குடும்பத்தை கரை சேர்த்தாக வேண்டிய ஆசிரியைகளும்தான்.
‘எழுத்தறிவித்தவன் இறை…